இந்தியாவின் பன்முக ஆன்மாவை மீட்க உறுதியேற்போம்: முதல்வா்

இந்தியாவின் பன்முக ஆன்மாவை மீட்க உறுதியேற்போம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இஸ்லாமிய வெறுப்பை எதிா்த்துப் போராடுவதற்கான பன்னாட்டு தினத்தையொட்டி, அவா் சமூக வலைதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: 2014-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதலே பாஜக இந்தியாவின் மதச்சாா்பின்மைத் தன்மையைச் சீா்குலைத்து, சகிப்பின்மையை வளா்த்துள்ளதுடன், இஸ்லாமிய சமூகத்தவருக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவித்து வருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்ற இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் வழியாக இஸ்லாமியா் மீதான வெறுப்பைச் சட்டபூா்வமாக்க வழிவகுக்கிறது. பாஜக ஆட்சியின் வகுப்புவாத பாசிசத்தை வேரறுத்து, அவா்களின் பிடியிலிருந்து இந்தியாவின் பரந்துபட்ட பன்முக ஆன்மாவை மீட்க உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com