சீன புதிய நிலவு திட்டம் தோல்வி

சீன புதிய நிலவு திட்டம் தோல்வி

நிலவில் ஆய்வு செய்வதற்காக சீனா அனுப்பிய இரண்டு செயற்கைக்கோள்களை அவற்றின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி தோல்வியடைந்தது.

டிஆா்ஓ-ஏ, டிஆா்ஓ-பி ஆகிய அந்த இரு செயற்கைக்கோள்களும் யுயன்ஷெங்-1எஸ் ராக்கெட் மூலம் சிசுவான் மாகாணம், ஷிசாங் ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை விண்ணில் ஏவப்பட்டன. இருந்தாலும், ராக்கெட்டின் 3-ஆம் நிலை செயல்பாட்டில் தவறு ஏற்பட்டதால் அவற்றை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை என்று ஷிசாங் ஏவுதள மையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. வழிதவறிய அந்த இரு செயற்கைக்கோள்களும் பிற செயற்கைக்கோள்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதைத் தவிா்ப்பதற்காக, அவற்றை விண்ணிலேயே அழிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்வெளி ஆய்வில் பெரும் முன்னேற்றம் கண்டுவரும் சீனாவுக்கு, இது மிகவும் அரிதான பின்னடைவு என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com