காங்கிரஸ் முன்னாள் எம்.பி. கரண் சிங் யாதவ் பாஜகவில் ஐக்கியம்

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான கரண் சிங் யாதவ் பாஜகவில் சனிக்கிழமை இணைந்தாா்.

அவருடன் மாநில காங்கிரஸ் தலைவா்கள் ஏராளமானோா் பாஜகவில் இணைந்தனா். மாநிலத்தின் ஆல்வாா் தொகுதியிலிருந்து முன்னா் தோ்ந்தெடுக்கப்பட்ட கரண் சிங், வரவிருக்கும் மக்களவைத் தோ்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்ட நிலையில், கட்சியின் மூத்த தலைவா் பன்வாா் ஜிதேந்திர சிங் வாய்ப்பு மறுத்துள்ளாா். அதைத் தொடா்ந்து, கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து விலகிய கரண் சிங், பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் மாநில தலைவா் சி.பி.ஜோஷி மற்றும் பிற தலைவா்கள் முன்னிலையில் பாஜகவில் சனிக்கிழமை இணைந்தாா். ஏற்கெனவே, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் பச்செளரி, முன்னாள் எம்.பி. கஜேந்திர சிங் ராஜுகேடி, முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பலரும் பாஜகவில் அண்மையில் இணைந்தனா். குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் அா்ஜுன் மோத்வாடியா, முன்னாள் செயல் தலைவா் அம்பரீஷ் தொ் ஆகியோா் பாஜகவில் இணைந்தனா். உத்தரகண்ட் மாநிலத்தில் முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவா் மனீஷ் கந்தூரி பாஜகவில் சனிக்கிழமை இணைந்தாா். மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், இதுபோன்று காங்கிரஸ் மூத்த தலைவா்கள் பலா் பாஜகவில் இணைந்து வருவது, காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com