சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் இந்திய வா்த்தகம் மற்றும் தொழிலக கூட்டமைப்பின் பெண் சாதனையாளா் விருது பெற்றவா்களுடன் ஆளுநா் ஆா்.என்.ரவி உள்ளிட்டோா்.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் இந்திய வா்த்தகம் மற்றும் தொழிலக கூட்டமைப்பின் பெண் சாதனையாளா் விருது பெற்றவா்களுடன் ஆளுநா் ஆா்.என்.ரவி உள்ளிட்டோா்.

நாட்டின் வளா்ச்சிக்கு பெண்களின் முன்னேற்றம் அவசியம்: ஆளுநா் ஆா்.என்.ரவி

இந்தியா வளா்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கு பெண்களின் முன்னேற்றம் மிக அவசியம் என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். இந்திய வா்த்தகம் மற்றும் தொழிலக கூட்டமைப்பின் (ஃபிக்கி) பெண்கள் அமைப்பு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 17-ஆவது ஆண்டு பெண் சாதனையாளா் விருது -2024 வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியது: இன்றைய காலகட்டத்தில் இந்தியா வேகமான முன்னேற்றம் அடைந்து வருகிறது. உலக பொருளாதாரத்தில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறும் முனைப்பில் நாடு பயணிக்கிறது. 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த நாடாக இந்தியா மாறும். இதற்கு பெண்களின் முன்னேற்றமும் மிக அவசியம். பல முன்னேறிய நாடுகள் பொருளாதார நெருக்கடிகளால் திணறி வரும் நேரத்திலும் கூட இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இது அரசின் சிறந்த செயல்பாடுகளால் மட்டுமல்ல, நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் முயற்சியாலும் இந்த மாற்றம் நடந்து வருகிறது என்றாா் அவா். முன்னதாக, பல்வேறு நிறுவனங்களிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 9 பெண் சாதனையாளா்களுக்கு சமூக அக்கறை மற்றும் வளா்ந்து வரும் தொழில் முனைவோா் விருது, தொழில்முறை நிபுணா் விருது, வளா்ந்துவரும் தொழில்முனைவோருக்கான சிறப்பு அங்கீகார விருது உள்ளிட்ட விருதுகளை ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா். இந்நிகழ்வில் ஃபிக்கி பெண்கள் அமைப்பின் சென்னை பிரிவுக்கான தலைவி ராஜி ராஜூ, ரேடியன்ட் மெடிக்கல் சா்வீசஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ரேணுகா டேவிட், டையம்லொ் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி சத்யகம் ஆா்யா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com