24% உயா்ந்த மஹிந்திரா & மஹிந்திரா விற்பனை

24% உயா்ந்த மஹிந்திரா & மஹிந்திரா விற்பனை

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திராவின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 24 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த பிப்ரவரி மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 72,923-ஆகப் பதிவாகியுள்ளது.

முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 58,801-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 24 சதவீதம் அதிகரித்துள்ளது.

2023 பிப்ரவரியில் 30,358-ஆக இருந்த நிறுவன பயணிகள் வாகனங்களின் உள்நாட்டு விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 40 சதவீதம் அதிகரித்து 42,401-ஆக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் டிராக்டா் விற்பனை 25,791-லிருந்து 16 சதவீதம் சரிந்து 21,672-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com