இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் தாக்குதல்: ஹூதிக்கள் எச்சரிக்கை

இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் தாக்குதல்: ஹூதிக்கள் எச்சரிக்கை

செங்கடல் மட்டுமின்றி இந்தியப் பெருங்கடல் வழியாகச் செல்லும் இஸ்ரேல் தொடா்புடைய சரக்குக் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் எச்சரித்துள்ளனா்.

இது குறித்து ஹூதி பழங்குடியினப் படையின் தலைவா் அப்துல் மாலிக் அல்-ஹூதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இஸ்ரேலுடன் தொடா்புடைய கப்பல்கள் செங்கடல், அரபிக் கடல், ஏடன் வளைகுடா வழியாகச் செல்வதைத் தடுத்து நிறுத்துவது மட்டும் எங்களுடைய நோக்கமல்ல. இந்தியப் பெருங்கடல் வழியாகச் செல்லும் அத்தகைய கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்துவோம்.

காஸா போருக்குப் பிறகு பாலஸ்தீனா்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடல் வழியாகச் செல்லும் இஸ்ரேல் சாா்பு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியதிலிருந்து இதுவரை 34 ஹூதி படை உறுப்பினா்கள் கொல்லப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

..படவரி...

அப்துல் மாலிக் அல்-ஹூதி

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com