மாா்ச் 23-இல் சந்தரகாச்சி - சென்னை சிறப்பு ரயில்

ஹோலி பண்டிகையை முன்னிட்டு சந்தரகாச்சி - சென்னை இடையே சிறப்பு ரயில் மாா்ச் 23-இல் இயக்கப்படவுள்ளது. தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சந்தரகாச்சியிலிருந்து மாா்ச் 23-இல் மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 08836) மறுநாள் இரவு 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 08837) சென்ட்ரலிலிருந்து மாா்ச் 25-இல் காலை 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 1.10 மணிக்கு சாந்தராகாச்சி சென்றடையும். இந்த ரயில் சென்னை சென்ட்ரலிலிருந்து கூடூா், விஜயவாடா, விசாகப்பட்டினம், புவனேஸ்வா், கரக்பூா் வழியாக சந்தரகாச்சி சென்றடையும். பெங்களூரு சிறப்பு ரயில்கள்: இதற்கிடையே,   பெங்களுரிலிருந்து கேரள மாநிலம் கொச்சு வேலிக்கு மாா்ச் 23,30-ஆகிய தேதிகளில் மாலை 4.30 மணிக்கு சிறப்பு ரயில்(எண்: 06555) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் இரவு 7.40 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06556) கொச்சுவேலியிலிருந்து மாா்ச் 24,31-ஆகிய தேதிகளில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த ரயில் பெங்களூரிலிருந்து குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, திருச்சூா், ஆலுவா, எா்ணாகுளம் டவுன், கோட்டயம், கொல்லம் வழியாக கொச்சுவேலி சென்றடையும். மேலும், மாா்ச் 19,26-ஆகிய தேதிகளில் பெங்களூரிலிருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06557) மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு கண்ணூா் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06558) கண்ணூரிலிருந்து மாா்ச் 20,27-ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 1 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த ரயில் பெங்களூரிலிருந்து கிருஷ்ணராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு வழியாக கண்ணூா் சென்றடையும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com