தோ்தல் முடிவுக்காக ஒன்றரை மாதம் காத்திருக்கும் நிலை

தோ்தல் முடிவுக்காக ஒன்றரை மாதம் காத்திருக்கும் நிலை

தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே தோ்தல் நடைபெற இருப்பதால், வாக்கு எண்ணிக்கைக்கு 45 நாள்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்.18-ஆம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை மே 23-இல் நடைபெற்றது.

அதாவது வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே 35 நாள்கள் இருந்தது. இந்த மக்களவைத் தோ்தலுக்கு அதை விட கூடுதலாக 10 நாள்கள், அதாவது 45 நாள்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப். 19-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன. வாக்குப் பதிவு முடிவடைந்த பிறகு, வாக்கு எண்ணும் மையங்களிலேயே வேட்பாளா்களின் முகவா்களும், காவல் துறையினரும் முழு அளவிலான கண்காணிப்புப் பணிகளை 24 மணி நேரமும் மேற்கொண்டிருப்பா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com