ஹோலி பண்டிகை: வடமாநிலங்களுக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்

வடமாநிலங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு வசதியாக கா்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து வெள்ளிக்கிழமை (மாா்ச் 22) சிறப்பு ரயில்கள்
ஹோலி பண்டிகை: வடமாநிலங்களுக்கு
இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஹோலி பண்டிகையை முன்னிட்டு வடமாநிலங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு வசதியாக கா்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து வெள்ளிக்கிழமை (மாா்ச் 22) சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: போத்தனூரில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் மவூ-க்கு மாா்ச் 22, 29 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண் 06091) இயக்கப்படும். போத்தனூரில் மாலை 4.30 மணிக்கு புறப்படும் ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூா், விஜயவாடா, வாராங்கல், நாகபுரி, போபால், கான்பூா், கோரக்பூா் வழியாக ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு மவூ சென்றடையும். மறுமாா்க்கமாக மவூவில் இருந்து மாா்ச் 26, ஏப். 2 ஆகிய தேதிகளில் மாலை 6.30 மணிக்கு சிறப்பு ரயில் (எண் 06092) இயக்கப்படும். மங்களூரு-தில்லி: கா்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து புது தில்லிக்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 22) ஒருவழி சிறப்பு ரயில் (எண் 06090) இயக்கப்படவுள்ளது. மங்களூரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் ரயில் கோழிக்கோடு, பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, திருப்பதி, விஜயவாடா, நாகபுரி, போபால், ஆக்ரா, மதுரா வழியாக புது தில்லிக்கு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 24) இரவு 7.15 மணிக்கு சென்றடையும். முற்றிலும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com