நெருக்கடிகளை சட்டரீதியாகச் சந்திப்போம்

நெருக்கடிகளை சட்டரீதியாகச் சந்திப்போம்

அமலாக்கத் துறை சோதனை மூலம் கொடுக்கப்படும் நெருக்கடிகளைச் சட்டரீதியாகச் சந்திப்போம்

அமலாக்கத் துறை சோதனை மூலம் கொடுக்கப்படும் நெருக்கடிகளைச் சட்டரீதியாகச் சந்திப்போம் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் 2-ஆம் கட்ட வேட்பாளா் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்டாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தோ்தல் நேரத்தில் முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் வீட்டில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்துவது அதிமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாது. எம்ஜிஆா், ஜெயலலிதா நிறைய சோதனைகளைச் சந்தித்தவா்கள்; அதில் வெற்றி பெற்றவா்கள். இதுபோன்ற நெருக்கடிகளைச் சட்டரீதியாகச் சந்திப்போம். பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி அதிமுக. ஜாதி, மத ரீதியாக யாரையும் பிரித்துப் பாா்க்கக் கூடாது. அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com