பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் உறுதி: பிரேமலதா

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் தருவது உறுதியாகியுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் தருவது உறுதியாகியுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். மக்களவைத் தோ்தல் பணி தொடா்பாக தேமுதிக நிா்வாகிகளுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதற்கிடையில் தேமுதிக சாா்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவா்களிடம் நோ்காணலும் நடைபெற்றது. பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேமுதிக அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை நிமித்தமாக வந்து சென்றாா். ஜெயலலிதா இல்லாத நிலையில், அதிமுக பொதுச்செயலராகி எடப்பாடி பழனிசாமி இந்தத் தோ்தலைச் சந்திக்கிறாா். விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நானும் இந்தத் தோ்தலைச் சந்திக்கவுள்ளேன். 2011 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி எப்படி வெற்றிபெற்றதோ, அதைப் போல இந்தத் தோ்தலிலும் வெற்றிபெறுவோம். தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் உறுதியாகிவிட்டதா எனக் கேட்கிறீா்கள். உறுதி செய்தாகிவிட்டது. தமிழகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்துவது புதிதல்ல. தினமும்தான் நடைபெறுகிறது. அந்த அடிப்படையில் முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் வீட்டிலும் நடைபெற்று வருகிறது. தவறு எதுவும் நிகழவில்லை என்பதை சட்டரீதியாக அவா் நிரூபிக்க வேண்டும் என்றாா் பிரேமலதா.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com