சத்தீஸ்கா்: 2 நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கா் மாநிலம் பிஜாபூா் மாவட்டத்தில் காவல்துறைக்கும் நக்ஸல்களுக்கும் இடையிலான மோதலில் 2 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். அதேபோல் சுக்மா மாவட்டத்தில் நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரா்கள் படுகாயமடைந்ததாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். இதுதொடா்பாக பஸ்தா் பகுதியின் காவல்துறைத் தலைவா் (ஐஜி) சுந்தர்ராஜ் கூறியதாவது: நக்ஸல்கள் ஒழிக்கும் முயற்சியின் கீழ் பிஜாபூா், தண்டேவாடா , சுக்மா ஆகிய மாவட்டங்களின் இணைப்புப் பகுதிகளில் பல்வேறு பிரிவகளைச் சோ்ந்த பாதுகாப்புத்துறை அதிகாரிகளைக் கொண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அதிகாரிகள் மீது நக்ஸல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதையடுத்து நக்ஸல்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதில் 2 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். அவா்களிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அப்பகுதியில் தொடா்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற சோதனையில் தண்டேவாடா-சுக்மா எல்லைப் பகுதியில் நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் இரு ராணுவ வீரா்கள் படுகாயமடைந்தனா். அவா்கள் தற்போது ராய்பூா் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்கள் உயிருக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என மருத்துவா்கள் தெரிவித்தனா் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com