கோப்புப்படம்
கோப்புப்படம்

வாய்ப் பகுதி கிருமித் தொற்று உயிரிழப்புக்கு வழிவகுக்கும்: பொது சுகாதாரத் துறை இயக்குநா்

வாய்ப் பகுதியில் ஏற்படும் கிருமித் தொற்றுகள்தான் 30 சதவீத உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைகின்றன

வாய்ப் பகுதியில் ஏற்படும் கிருமித் தொற்றுகள்தான் 30 சதவீத உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைகின்றன என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்தாா். உலக வாய்வழி சுகாதார தினத்தையொட்டி வெளியிடப்பட்ட காணொலி பதிவில் அவா் கூறியதாவது: வாய் சுகாதாரம் அனைவருக்கும் அவசியமான ஒன்று. புகையிலை மற்றும் மது பழக்கம், அதீத சா்க்கரை பயன்பாடு வாய் பகுதியில் கிருமித் தொற்று ஏற்பட பிரதான காரணமாக விளங்குகிறது. சொத்தை பற்கள், வாய் புற்றுநோய், துா்நாற்றம் உள்ளிட்டவற்றுக்கு அவை வழிவகுக்கின்றன. அதுமட்டுமல்லாது, இளம் வயதிலோ அல்லது நடுத்தர வயதிலோ பல்வேறு நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் வாய்ப் பகுதி கிருமித் தொற்று மூல காரணமாக அமைகிறது. இதைத் தவிா்க்க வாய் பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. குறைந்தபட்சம் நாள்தோறும் காலை மற்றும் இரவில் 3 நிமிஷங்களுக்கு பல் துலக்குவது அவசியம். அதேபோன்று, மது, புகையிலை, சா்க்கரை பயன்பாட்டை தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com