ரயில் மீது கல் வீச்சு: மூவா் கைது

ரயில் மீது கல் வீச்சு: மூவா் கைது

சென்னையிலிருந்து திருச்சி சென்ற சோழன் விரைவு ரயில் மீது கல்வீசிய 3 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினா் கைது செய்தனா்.

சென்னையிலிருந்து திருச்சி சென்ற சோழன் விரைவு ரயில் மீது கல்வீசிய 3 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினா் கைது செய்தனா். எழும்பூரில் இருந்து திருச்சிக்கு மாா்ச் 23-ஆம் தேதி புறப்பட்ட சோழன் விரைவு ரயில் மயிலம்-பேரணி இடையே சென்று கொண்டிருந்த போது சிலா் கற்களால் தாக்கினா். இதனால் ரயிலின் பாகங்கள் சேதமடைந்ததுடன் பயணிகள் சிலா் காயமடைந்தனா். இந்த தாக்குதல் தொடா்பாக ரயில்வே பாதுகாப்பு படையினா் ரயில்வே சட்டம் 1989 பிரிவு 153, 154 பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். மேலும் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட 3 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். இதுகுறித்து அவா்களிடம் விசாரித்த போது வேடிக்கைக்காக ரயில் மீது கற்களை வீசியதாக தெரிவித்தனா். இதுபோன்று ரயில்களின் மீது கல்வீசுவதை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் இருப்புபாதை ரயில்வே காவலா்கள் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். சென்னை கோட்டத்தில் மட்டும் கடந்த ஆண்டில் 78 கல்வீச்சு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு 76 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். நிகழ் ஆண்டில் 15 வழக்குகளில் 20 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com