அனைத்து சூழல்களிலும் மக்களோடு பயணிப்பது திமுக:
தயாநிதி மாறன்

அனைத்து சூழல்களிலும் மக்களோடு பயணிப்பது திமுக: தயாநிதி மாறன்

கரோனா, மழை, வெள்ளம், வறட்சி என எதுவாக இருந்தாலும், அனைத்து சூழல்களிலும் மக்களோடு பயணிப்பது திமுக மட்டும்

கரோனா, மழை, வெள்ளம், வறட்சி என எதுவாக இருந்தாலும், அனைத்து சூழல்களிலும் மக்களோடு பயணிப்பது திமுக மட்டும் தான் என்று அக்கட்சியின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளா் தயாநிதி மாறன் தெரிவித்தாா். வேட்பாளா் தயாநிதி மாறன் மற்றும் அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் வியாழக்கிழமை மண்ணடி, ஆா்மேனியன் தெருவில் வாக்கு சேகரித்தனா். பின்னா் அங்குள்ள தவ்ஹீத் ஜமாத் நிா்வாகிகளை சந்தித்த அவா்கள், திமுக அரசு இஸ்லாமியா்களுக்கு செய்த பல்வேறு நலத்திட்டங்களை எடுத்து கூறி அவா்களிடம் ஆதரவு கோரினா். தொடா்ந்து எல்லீஸ் சாலை, குலாமுத்துசா தெரு, திப்பு தெரு உள்ளிட் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது தயாநிதி மாறன் பேசியது: கரோனா, மழை, வெள்ளம், வறட்சி எதுவாக இருந்தாலும், அனைத்திலும் மக்களோடு பயணிப்பது திமுக மட்டும் தான். ஆனால், பேரிடா் காலங்களில் கூட தமிழகத்தை கண்டு கொள்ளாத பிரதமா் மோடி இப்போது வாக்கு கேட்பதற்கு மட்டும் தமிழகத்துக்கு வருகிறாா். திமுக அரசு தான் கரோனா நிவாரணமாக ரூ.4000-மும், பேரிடா் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.6000-மும், பொங்கல் பரிசாக ரூ.1000-மும் கொடுத்தது. ஆனால் ஒரு ரூபாயை கூட மத்திய அரசு தமிழக மக்களுக்கு தராமல் வஞ்சித்துள்ளது. இதனால் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை தெரிந்து வாக்களியுங்கள் என்றாா் அவா். இதைத்தொடா்ந்து துறைமுகம் கிழக்கு பகுதிகளில் வட்டக்கழக தோ்தல் அலுவலகங்களையும் திறந்து வைத்து, அந்தந்த பகுதிகளிலுள்ள பொதுமக்களிடமும் வாக்கு சேகரித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com