ரூ. 85 லட்சம் மோசடி: 
இளைஞா் கைது
dot com

ரூ. 85 லட்சம் மோசடி: இளைஞா் கைது

சென்னை தியாகராய நகரில் ரூ. 85 லட்சம் மோசடி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை தியாகராய நகரில் ரூ. 85 லட்சம் மோசடி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். தியாகராய நகா் பகுதியில் வசிப்பவா் அண்ணாதுரை (58). இவா், அபிபுல்லா சாலையில் உள்ள ஒரு வீட்டை ரூ. 20 லட்சத்துக்கு குத்தகைக்கு எடுத்து வசித்து வந்தாா். இந்த நிலையில், அண்ணாதுரையிடம், நுங்கம்பாக்கம் வள்ளுவா் கோட்டத்தைச் சோ்ந்த மாரியப்பன் (32) என்பவா் அறிமுகமானாா். இவா் அண்ணாதுரை வசித்த வீட்டின் உரிமையாளரின் நண்பா் ஆவாா். குத்தகைக்கு வசிக்கும் வீட்டையே, உரிமையாளரிடம் பேசி ரூ. 50 லட்சத்துக்கு சொந்தமாக வாங்கித் தருகிறேன் என்று மாரியப்பன் அண்ணாத்துரையிடம் கூறியுள்ளாா். இதை நம்பி அண்ணாதுரை பல்வேறு தவணைகளில் ரூ. 50 லட்சத்தை மாரியப்பனிடம் கொடுத்தாா். இதை பெற்றுக்கொண்ட மாரியப்பன், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் மாதம் 2 சதவீதம் லாபம் கிடைக்கும் என கூறியுள்ளாா். இதையடுத்து அண்ணாதுரை, மாரியப்பனிடம் மேலும் ரூ. 35 லட்சம் கொடுத்துள்ளாா். ஆனால் மாரியப்பன், தான் கூறியப்படி வீட்டை வாங்கிக் கொடுக்காமலும், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யாமலும் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அண்ணாதுரை சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில், மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மாரியப்பனை புதன்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com