ரயில்
ரயில்

மார்ச் 31: கோவை-சென்னைக்கு சிறப்பு ரயில்

கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 31) சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06050) மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து திங்கள்கிழமை (ஏப்.1) காலை 10.20 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8.25 மணிக்கு கோவை சென்றடையும். இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com