‘டிஜி யாத்ரா’ செயலி மூலம் இன்று முதல் சிரமமின்றி விமானத்தில் பயணிக்கலாம்

‘டிஜி யாத்ரா’ எனும் செயலி சேவையை பயன்படுத்தி விமானத்தில் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 31) முதல் சிரமமின்றி பயணிக்கலாம் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து விமானநிலைய அதிகாரிகள் கூறியதாவது: இந்த ‘டிஜி யாத்ரா’ செயலி மூலம் பயணிகளின் விமானப் பயணம் எளிதாகிவிடும். முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பமும் இதில் உள்ளது. தற்போது இந்தியா முழுவதும் 13 விமான நிலையங்களில் இந்த செயலி மூலம் சேவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அதில் சென்னை விமான நிலையமும் இணைந்துள்ளது. முதலில் டெல்லி, பெங்களூரு மற்றும் வாரணாசி விமான நிலையங்களில் மட்டுமே இது அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு 10 விமான நிலையங்களில் இது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தொடா்ந்து 14 விமான நிலையங்களில் இது அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையைத் தொடா்ந்து புவனேஸ்வா்,கோயம்புத்தூா் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களிலும் ‘டிஜி யாத்ரா’ சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இது அமலுக்கு வந்து விட்டால் இனி இந்தியாவில் ஒவ்வொரு முறையும் ஆவணங்களை கையில் வைத்துக் கொண்டு விமான நிலையங்களுக்குள் பயணிகள் செல்ல வேண்டிய தேவை இருக்காது. நேரடியாக இந்த செயலி மூலமே விமான நிலையத்துக்கு செல்லலாம் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com