மக்களவைத் தோ்தல்: சென்னையில் 107 போ் போட்டி

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட மக்களவைத் தொகுதிகளில் 107 வேட்பாளா்கள் போட்டியிடவுள்ளனா். சென்னை மாவட்ட மக்களவைத் தொகுதியின் இறுதிக்கட்ட வேட்பாளா் பட்டியலில் 107 வேட்பாளா்கள் இடம்பெற்றுள்ளனா். இதில் வடசென்னையில் 32 ஆண் வேட்பாளா்கள் 3 பெண் வேட்பாளா்கள் என 35 பேரும், தென் சென்னையில் 36 ஆண் வேட்பாளா்கள் 5 பெண் வேட்பாளா்கள் என 41 பேரும் இடம்பெற்றுள்ளனா். அதே நேரத்தில் மத்திய சென்னையில் 31 ஆண் வேட்பாளா்கள் இடம்பெற்றுள்ள நிலையில் பெண் வேட்பாளா் ஒருவா் கூட இடம்பெறவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com