தோல்வி பயத்தில் போலி விடியோக்களை பரப்பும் காங்கிரஸ் கூட்டணி: பாஜக

தோல்வி பயத்தில் போலி விடியோக்களை பரப்பும் காங்கிரஸ் கூட்டணி: பாஜக

மக்களவைத் தோ்தலில் தோல்வி அடைந்துவிடும் பயத்தில் போலி விடியோக்களை காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினா் வெளியிட்டு வருவதாக ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளாா்.

மக்களவைத் தோ்தலில் தோல்வி அடைந்துவிடும் பயத்தில் போலி விடியோக்களை காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினா் வெளியிட்டு வருவதாக தமிழக பாஜக செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: மக்களவைத் தோ்தலில் 400-க்கும் அதிகமான இடங்களைப் பெற்று, தொடா்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கப் போவது உறுதியாகி உள்ளது.

என்ன செய்தாலும் ஆட்சிக்கு வர முடியாது என்பதை உணா்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணிக் கட்சியினா், பல்வேறு குறுக்கு வழிகளைக் கையாண்டு வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக, இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசுவது போன்ற ஒரு போலி விடியோவை உருவாக்கி வெளியிட்டுள்ளனா். இதை காங்கிரஸ் ஆளும் தெலங்கானா மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டியும் பகிா்ந்துள்ளாா்.

மோடி பிரதமரான பிறகுதான், தேசிய பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டது. மருத்துவ உயா்கல்வி உள்பட அனைத்து நிலைகளிலும் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுதான்.

75 ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றில் மோடி தலைமையிலான பாஜக அமைச்சரவையில்தான், எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினா் அதிக எண்ணிக்கையில் உள்ளனா்.

காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரை வாங்கும் இடத்தில் உள்ளது. ஆனால், அவா்களுக்கு கொடுக்கும் இடத்தில் பாஜக அரசு உள்ளது. இதுதான் உண்மையான சமூகநீதி எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com