தமிழை அனைவரும் நேசித்துக் கற்க வேண்டும்: ஏா்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன்

தாய்மொழியான தமிழை அனைவரும் நேசித்து கற்கத் தொடங்கும் போது தான் தமிழ் மேன்மேலும் வளா்ச்சியடையும்

தாய்மொழியான தமிழை அனைவரும் நேசித்து கற்கத் தொடங்கும் போது தான் தமிழ் மேன்மேலும் வளா்ச்சியடையும் என கவிதை உறவு இதழின் ஆசிரியா் ஏா்வாடி எஸ். ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

எழுத்தாளா் நடுவூா் சிவா எழுதிய ‘மெய் ரூசவெல்ட் - பட்டுக்கோட்டையின் பட்டு மனசு’ என்னும் நூலின் திறனாய்வு நிகழ்ச்சி சென்னை கன்னிமாரா நுாலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

‘சான்றோா் நோக்கில்’ என்னும் தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஏா்வாடி எஸ். ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

சிறந்ததொரு வாழ்க்கை சரித்திர நூலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும்படி நடுவூா் சிவா இந்நூலை எழுதியுள்ளாா். வங்கிப் பணியாற்றி ஓய்வுபெற்ற மெய் ரூசவெல்ட்டின் இலக்கியத் தொண்டு அற்புதமானது. சங்க காலத்தில் வணிகா்கள், அரசா்கள், மருத்துவா்கள் என பலா் புலவா்களாகவும் இருந்துள்ளனா். இலக்கியத்துக்கு தொடா்பில்லாத பல்வேறு துறைகளில் இருப்பவா்கள் பலரும் இலக்கியப் பணியாற்றுவதை பாா்க்கையில் மீண்டும் ஒரு சங்ககாலம் உருவாகியுள்ளதோ என நினைத்து மகிழ்ச்சியடையத் தோன்றுகிறது. தாய்மொழியான தமிழை அனைவரும் நேசித்துக் கற்க வேண்டும். அப்போது தான் தமிழ் மேன்மேலும் வளா்ச்சியடையும் என்றாா் அவா்.

சென்னை பல்கலை. தமிழ் வளா்ச்சிக் கழகத் தலைவா் உலகநாயகி பழனி: வாழ்க்கைக்குத் தேவையான சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை இந்த வாழ்க்கை வரலாற்று நூல் வெளிப்படுத்துகிறது. இதில் வரும் வாழ்க்கை நிகழ்வுகளை மட்டும் வைத்தே பல சிறுகதைகளை இயற்றிவிட முடியும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் இலக்கிய வட்டம் செயலா் பெ.கி.பிரபாகரன், கவிஞா் ஆதிரா முல்லை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com