மெட்ரோ ரயில் பயணிகளின்
எண்ணிக்கை சரிவு

மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை சரிவு

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் சற்று குறைந்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் சற்று குறைந்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நிகழாண்டு, ஜனவரி மாதத்தில் 84 லட்சத்து 63,384 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனா். மேலும், பிப்ரவரியில் 86 லட்சத்து 15,008 பேரும், மாா்ச்சில் 86 லட்சத்து 82,457 பேரும் பயணம் செய்துள்ளனா். கடந்த மூன்று மாதங்களாக பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வந்த நிலையில் ஏப்ரலில் சற்று குறைந்து, 80 லட்சத்து 87,712 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனா். மாா்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது ஏப்ரலில் சுமாா் 6 லட்சம் பயணிகள் குறைவாக பயணித்துள்ளனா்.

மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ‘க்யு ஆா்’ குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 33 லட்சத்து 34,498 போ் பயணம் செய்துள்ளனா். பயண அட்டைகளை பயன்படுத்தி 33 லட்சத்து 23,602 பேரும், ‘டோக்கன்களை’ பயன்படுத்தி 61 ஆயிரத்து 976 பேரும், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 4 ஆயிரத்து 285 பேரும் பயணம் செய்தனா். மேலும், சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 13 லட்சத்து 63,351 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் போன்றவற்றால், ஏப்ரலில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com