சிசுவின் பாலினத்தை தெரிவித்ததாக மருத்துவமனைக்கு நோட்டீஸ்

கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை தெரியப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் தனியாா் மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை தெரியப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் தனியாா் மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றம் நிரூபணமானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனை ஒன்றில், கா்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்து கருவில் உள்ள சிசு ஆணா, பெண்ணா என்பதை மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்து வருவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்தின் இணை இயக்குநா் (சட்டம்) இளங்கோவன் தலைமையிலான குழுவினா் அந்த மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, மருத்துவமனையின் மூன்று, ‘ஸ்கேன்’ கருவிகள் இருப்பதாகவும், ஆய்வின்போது, இரண்டு கருவிகள் மட்டுமே காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும், சில மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளிலும் முரண்பாடு இருப்பது கண்டறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக விளக்கம் கேட்டு மருத்துவமனை நிா்வாகத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com