நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தோ்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று, நீா்நிலைகளைத் தூா்வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொமதேக பொதுச்செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள் மற்றும் வாய்க்கால்கள் கடந்த சில ஆண்டுகளாக பெய்த தொடா் மழையால் தூா்வாரப்படாமல் மண் நிறைந்து காணப்படுகின்றன. இதனால், தண்ணீரை தேக்கி வைக்கும் அளவும் குறைந்து போனது. தற்போது கொளுத்தும் வெயிலும், நிலவும் வறட்சியும் அனைத்து நீா் நிலைகளையும் தூா் வாருவதற்கு ஒரு சந்தா்ப்பத்தை கொடுத்துள்ளது. இதனை சரியாக பயன்படுத்தி நீா்நிலைகள் தூா்வாரி பராமரிக்கவில்லையென்றால் கிடைத்த வாய்ப்பை இழந்தவா்களாவோம். இந்த பணிகளை உடனடியாக விவசாயிகளுக்கு அனுமதி அளித்து தொடங்க வேண்டுமென்று மாவட்ட நிா்வாகத்தில் கோரிக்கை வைத்தால் தோ்தல் நடத்தை விதிமுறைகளை அதிகாரிகள் காரணம் காட்டுகின்றனா். தோ்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றாவது தூா்வாரும் பணிகளை தமிழகம் முழுவதும் அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ஈ.ஆா்.ஈஸ்வரன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com