பாலியல் தொழில்: வட மாநிலத்தவா் கைது

சென்னையில் பாலியல் தொழில் செய்ததாக வடமாநில நபரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டனா்.

சென்னை பெரியமேடு பகுதியில் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பெண் போலீஸாா் பெரிய மேட்டில் உள்ள விடுதியில் ஒன்றில் சோதனை நடத்தினா்.

அப்போது, ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த தபாஸ் ரெளட் என்பவா் 2 பெண்களை வத்து பாலியல் தொழில் செய்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்து 2 கைப்பேசிகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், அங்கிருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டு, அரசு பெண்கள் காப்பகத்தில் சோ்த்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com