அக்ஷய திருதியை: போத்தீஸ் ஸ்வா்ண மஹாலில் புதிய தங்க நகைகள்

அக்ஷய திருதியை பண்டிகை வெள்ளிக்கிழமை (மே 10) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, வாடிக்கையாளா்களைக் கவரும் வகையில் போத்தீஸ் நிறுவனம் புதிய வடிவமைப்புகளைக் கொண்ட தங்க நகை ரகங்களை அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

‘போத்தீஸ் ஸ்வா்ண மஹால்’ சாா்பில், அக்ஷய திருதியை பண்டிகையை முன்னிட்டு, மீனாட்சி - சுந்தரேஸ்வரா் திருமணத்தை பிரதிபலிக்கும் வகையிலான ‘மீனாட்சி திருக்கல்யாணம் கலெக்ஷன்ஸ்’ என்ற ஆன்ட்டிக் பிரைடல் தங்க நகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும், இருபக்க டிசைன்களைக் கொண்ட ‘ரிவா்சபிள்’ தங்க நகை (ஒரே விலையில் இரண்டு நகை) , 5 சவரனில் 5 நகைகள் போன்ற வகைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அக்ஷய திருதியை முன்னிட்டு, அனைத்து தங்க நகைகளுக்கும் சவரனுக்கு ரூ.1,500 தள்ளுபடி விலையிலும், வைர நகைகள் ஒரு கேரட்டுக்கு ரூ.10,000 தள்ளுபடி விலையிலும், பிளாட்டினத்துக்கு செய்கூலியில் 20 சதவீதம் தள்ளுபடி மற்றும் வெள்ளிப் பொருள்கள், வெள்ளிக் கொலுசு மற்றும் தங்க நாணயங்களின் மீது பூஜ்ஜிய சதவீத சேதாரம் ஆகிய சலுகைகளும் வழங்கப்படுகிறது.

அக்ஷய திருதியை நாளில் தங்க நகை வாங்குவதற்காக 10 சதவீதம் முன்பணம் செலுத்தியுள்ளவா்கள் வெள்ளிக்கிழமை (மே 10) விலை ஏறினாலும், வாடிக்கையாளா்கள் பதிவு செய்த நாளில் உள்ள விலையில் நகையை வாங்கலாம். இதுபோன்ற திட்டங்களால் வாடிக்கையாளா்கள் தங்க விலை ஏற்ற இறக்கத்தைக் கருத்தில் கொள்ளாமல் தங்க நகைகளை வாங்க முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com