தங்கம் விலை மீண்டும் சரிவு: 
பவுன் ரூ.52,920-க்கு விற்பனை

தங்கம் விலை மீண்டும் சரிவு: பவுன் ரூ.52,920-க்கு விற்பனை

சென்னையில் 2-ஆவது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,920-க்கு விற்பனையானது.

சென்னையில் ஆபரணத் தங்கம் புதன்கிழமை ஒரு கிராம் ரூ. 6,630-க்கும், ஒரு பவுன் ரூ. 53,040-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், 2-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,615-க்கும், புவுனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 52,920-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா அதிகரித்து ரூ.88.70-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 200 அதிகரித்து ரூ.88,700-க்கும் விற்பனையானது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com