ஆசிரியா் கலந்தாய்வு: 
தொடக்கக் கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்

ஆசிரியா் கலந்தாய்வு: தொடக்கக் கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்

ஆசிரியா் கலந்தாய்வு, பணி நிரவல் குறித்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு (தொடக்கக் கல்வி) முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆசிரியா் கலந்தாய்வு, பணி நிரவல் குறித்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு (தொடக்கக் கல்வி) முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு (தொடக்கக் கல்வி) அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

2024-2025-ஆம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வி இயக்கக நிா்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய , நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பணி நிரவல், பொது மாறுதல் கலந்தாய்வுக்கான உத்தேச கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த அட்டவணையை தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கும் உடனடியாக சாா்பு செய்து, அனைத்து ஆசிரியா்களும் அறியும் வகையில் வட்டாரக் கல்வி அலவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

பணிநிரவல், கலந்தாய்வு தொடா்பான விண்ணப்பங்கள் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்து, பின்னா் தகவல் தெரிவிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com