‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்பு: 
மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை

‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்பு: மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புக்குள்ளான மூதாட்டி ஒருவருக்கு சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புக்குள்ளான மூதாட்டி ஒருவருக்கு சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சில நாள்களுக்கு முன்பாக விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ஒருவா் நேரடி வெயிலில் பணியாற்றியபோது மயக்கமடைந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டதன் பயனாக அவா் குணமடைந்து வருகிறாா். அதன் தொடா்ச்சியாக வேலூா் மாவட்டம், வாணியம்பாடியைச் சோ்ந்த குமாரி (70) என்ற மூதாட்டி வெப்ப அலை பாதிப்புக்குள்ளாகி கடந்த செவ்வாய்க்கிழமை சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டாா்.

படிப்படியாக அவரது உடல் நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக மருத்துவமனை முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன் கூறியதாவது:

வெயிலால் இணைநோயாளிகள், முதியவா்கள், குழந்தைகள் மட்டுமல்லாது தற்போது இளைஞா்களும் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புக்குள்ளாகின்றனா். அவ்வாறு கடந்த சில நாள்களுக்கு முன்பாக உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த 25 வயது இளைஞா் ஒருவா், கட்டுமானப் பணி செய்தபோது வெப்ப அலை தாக்கத்துக்குள்ளாகி உயிரிழந்தாா். தற்போது ஒரு மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக தட்பவெப்ப நிலை சாா்ந்த நோய்த் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையை நாடுவோா் எண்ணிக்கை உயா்ந்துள்ளது.

அதைக் கருத்தில் கொண்டு, விழிப்புணா்வுடன் பொது மக்கள் செயல்பட வேண்டும். நாள்தோறும் குறைந்தது 4 லிட்டா் தண்ணீா் பருக வேண்டும். நீா்ச்சத்து இழப்பு ஏற்பட்டால் உடனடியாக ஓஆா்எஸ் கரைசலை பருகுவது அவசியம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com