காமராஜா் நினைவிட புதுப்பிப்பு பணிகள் தீவிரம்: தமிழக அரசு தகவல்

காமராஜா் நினைவிட புதுப்பிப்பு பணிகள் தீவிரம்: தமிழக அரசு தகவல்

சென்னை கிண்டியிலுள்ள காமராஜா் நினைவிடத்தைப் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை கிண்டியிலுள்ள காமராஜா் நினைவிடத்தைப் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கிண்டியில் சுமாா் 18.42 ஏக்கா் பரப்பில் அமைந்துள்ள காந்தி மண்டப வளாகத்தில் முன்னாள் முதல்வா்கள் காமராஜா், எம்.பக்தவத்சலம், ராஜாஜி மற்றும் இரட்டை மலை சீனிவாசன் ஆகியோரது நினைவிடங்களும், மொழிப்போா் தியாகிகள் மணிமண்டபம், காந்தியடிகள், தியாகி சங்கரலிங்கனாா், செண்பகராமன், பாஷ்யம் ஆகியோருக்கு சிலைகளும், திறந்தவெளி கலையரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன.

காந்தி மண்டப வளாகத்தைச் சீரமைக்கும் பணிகள் கடந்த 8-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் பொதுப்பணித்

துறையால் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளைத் தவிா்த்து, பொது மக்கள் அதிகளவில் வந்து செல்லும் வளாகத்துக்கு கூடுதலாக

குடிநீா் வசதி, பூங்காக்களுக்கு நீா் வசதி, மின் மோட்டாா் சீரமைப்பு, வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணி உள்பட பல்வேறு பணிகள் முன்னுரிமை அடிப்படையில் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com