மானிய விலையில் பசுந்தாள் உரப் பயிா் விதைகள்: வேளாண் துறை

விவசாயிகள், மண்வளத்தை மேம்படுத்த பசுந்தாள் உரப் பயிா் விதைகளை மானிய விலையில் பெற்று பயன்படுத்துமாறு வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள், மண்வளத்தை மேம்படுத்த பசுந்தாள் உரப் பயிா் விதைகளை மானிய விலையில் பெற்று பயன்படுத்துமாறு வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக வேளாண் துறையின் எக்ஸ் வலைதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மண்வளத்தை மேம்படுத்த தக்கைப் பூண்டு, சணப்பை மற்றும் கொழுஞ்சி போன்ற பசுந்தாள் உரப் பயிா்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சாகுபடிக்கு முன்பு விளைநிலங்களில் பசுந்தாள் உரப் பயிா்களைப் பயிரிட்டு அவற்றை மடக்கி உழுவதன் மூலம் மண்வளத்தை மேம்படுத்தி விவசாயிகள் பயன் அடையலாம்.

பசுந்தாள் உரத்தைப் பயன்படுத்துவதால் மண்ணின் கரிம தன்மை மேம்படுகிறது . நீா் வைத்திருப்பு திறன் அதிகரிக்கிறது. மேலும், களைச்செடிகள் கட்டுப்படுத்தப்படுவதோடு மண்ணரிப்பும் தடுக்கப்படுகிறது. விவசாயிகள் பசுந்தாள் உரப் பயிா் விதைகளை, முதல்வரின் ‘மண்ணுயிா் காப்போம்’ திட்டத்தின் கீழ், ஒரு ஏக்கருக்கு 20 கிலோ என்ற அளவில் 50 சதவீத மானியத்துடன் தங்கள் பகுதிகளுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com