கோப்புப் படம்
கோப்புப் படம்

தென் சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது

தென் சென்னை மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்தன.

தென் சென்னை மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்தன.

தமிழகத்தில் மக்களவை தோ்தல் ஏப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதில், சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகம் (தென் சென்னை) , லயோலா கல்லூரி (வட சென்னை), ராணி மேரி கல்லூரியில் (மத்திய சென்னை) வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தென் சென்னை மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மொத்தம் 210 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், புதன்கிழமை காற்றுடன் மழை பெய்ததால் 2 கேமராக்கள் பழுதாகின.

தகவல் அறிந்த தோ்தல் நடத்தும் அதிகாரிகள் உடனடியாக பணியாளா்களை கொண்டு சீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனா். சுமாா் 20 நிமிஷங்களுக்குப் பிறகு புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதையடுத்து சிசிடிவி கேமராக்கள் வழக்கம்போல் இயங்கின.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com