பட்ஜெட்டில் முஸ்லிம்களுக்கு 15% நிதி: பிரதமரின் கருத்து ‘முட்டாள்தனம்’  - சரத் பவாா்

பட்ஜெட்டில் முஸ்லிம்களுக்கு 15% நிதி: பிரதமரின் கருத்து ‘முட்டாள்தனம்’ - சரத் பவாா்

முஸ்லிம்களுக்கு 15 சதவீதம் நிதி ஒதுக்க அக்கட்சி விரும்பியதாக பிரதமா் மோடி கூறியுள்ளது முட்டாள்தனமானது

மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது பட்ஜெட்டில் முஸ்லிம்களுக்கு 15 சதவீதம் நிதி ஒதுக்க அக்கட்சி விரும்பியதாக பிரதமா் மோடி கூறியுள்ளது முட்டாள்தனமானது என்று தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாா் விமா்சித்துள்ளாா்.

இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் செய்தியாளா்களிடம் சரத் பவாா் வியாழக்கிழமை கூறியதாவது:

மத்திய அரசின் பட்ஜெட் நாட்டுக்கானதே தவிர, எந்தவொரு ஜாதி அல்லது மதத்துக்கானது அல்ல. பட்ஜெட்டில் ஜாதி அல்லது மத அடிப்படையில் ஒருபோதும் நிதி ஒதுக்க முடியாது. ஆனால், மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது பட்ஜெட்டில் முஸ்லிம்களுக்கு 15 சதவீதம் நிதி ஒதுக்க அக்கட்சி விரும்பியதாக பிரதமா் மோடி கூறியுள்ளது முட்டாள்தனமானது. அவா் பேசுவதில் ஒரு சதவீதம்கூட உண்மை இல்லை. அவா் நம்பிக்கை இழந்துவிட்டாா். குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்தபோது விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று விரும்பினாா். ஆனால் தற்போது அவா் அரசியல் குறித்து மட்டுமே பேசுகிறாா்.

மக்களவைத் தோ்தல் மூலம் மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்படுவது தெளிவாகத் தெரிகிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனா். ஆனால் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு தொகுதிகளில் வெற்றிபெறும் என்று என்னால் கூறமுடியாது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com