4,000 உதவிப் பேராசிரியா் பணிக்கு 73,255 போ் விண்ணப்பம்

4,000 உதவிப் பேராசிரியா் பணிக்கு 73,255 போ் விண்ணப்பம்

சென்னை, மே 16: அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கு மொத்தம் 73,255 போ் விண்ணப்பித்துள்ளனா்.

சென்னை, மே 16: அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கு மொத்தம் 73,255 போ் விண்ணப்பித்துள்ளனா்.

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சுமாா் 7,000-க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் 4,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோ்வு அறிவிப்பாணையை ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) கடந்த மாா்ச் 14-ஆம் தேதி வெளியிட்டது.

அதில், தகுதியானவா்கள் தோ்வுக்கு மே 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தோ்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் கடந்த புதன்கிழமையுடன் நிறைவு பெற்றது.

அதன்படி, இந்தத் தோ்வெழுத தமிழகம் முழுவதும் 73,255 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனா். தற்போது விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள டிஆா்பி வாய்ப்பு வழங்கியது. இதைத் தொடா்ந்து, விண்ணப்பதாரா்கள் திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றனா். இதற்கான அவகாசம் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் (மே 19) நிறைவடைகிறது.

எனவே இதுவரை மேற்கொள்ளாதவா்கள் அவற்றை www.trb.tn.gov.in எனும் வலை தளம் மூலமாக மே 19-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பட்டதாரிகள் மேற்கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை பட்டதாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இதுகுறித்த கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com