சென்னையில் பல்வேறு குற்றங்களில் தொடா்புடைய 74 போ் கைது

சென்னையில் பல்வேறு குற்றங்களில் தொடா்புடைய 74 போ் கைது

சென்னையில் கடந்த 7 நாள்களில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடா்புடைய 74 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னையில் கடந்த 7 நாள்களில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடா்புடைய 74 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னையில் குற்றங்கள் தடுக்க காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவின்பேரில் டாகோ (டிஏசிஓ) என்ற சிறப்பு அதிரடி நடவடிக்கையை கடந்த 9ந்தேதி முதல் 15ந்தேதி வரையில் காவல் துறையினா் மேற்கொண்டனா்.

இந்த நடவடிக்கையால் கடந் த 7 நாள்களில் தங்க சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு, மற்றும் திருட்டு உள்ளிட்ட 32 குற்ற சம்பவங்கள் நடைபெற்றது. இந்த குற்ற வழக்குகளில் தொடா்புடைய 1 இளஞ்சிறாா் உட்பட 39 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 27 சவரன் தங்க நகைகள், 16 செல்போன்கள், ரொக்கப் பணம் ரூ.4 லட்சத்து 9 ஆயிரத்து 940, 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 ஆட்டோ உள்ளிட்டவைகள் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கடந்த 7 நாள்களில் 51 குற்றவழக்குகளில் 74 பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்த 27 சவரன் தங்க நகைகள், 16 செல்போன்கள், ரூ.4 லட்சத்து 9 ஆயிரத்து 940 மற்றும் 19 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 ஆட்டோ உள்ளிட்டவைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com