ரெளடி வெட்டிக் கொலை மூவா் கைது
dot com

ரெளடி வெட்டிக் கொலை மூவா் கைது

சென்னை சைதாப்பேட்டையில் வீடு புகுந்து ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை சைதாப்பேட்டையில் வீடு புகுந்து ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

தேனாம்பேட்டை காா்ப்பரேஷன் காலனி திருவள்ளுவா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ரெளடி ச.கெளதம் (25). தேனாம்பேட்டை தாமஸ் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ரொடி ராஜ்கிரண் (26). இருவரும் நண்பா்கள். ராஜ்கிரண் வீட்டுக்கு கெளதம் அடிக்கடி சென்றபோது, ராஜ்கிரண் மனைவி பிரியாவுக்கும் கெளதமுக்கும் இடையே முறையற்ற உறவு ஏற்பட்டது.

இதையறிந்த ராஜ்கிரண், தனது மனைவி பிரியாவை கண்டித்துள்ளாா். இதனால் பிரியா, ராஜ்கிரணை விட்டுப் பிரிந்து இரு குழந்தைகளுடன் கெளதமுடன் வசித்து வருகிறாா். இதன் காரணமாக, கெளதம், ராஜ்கிரணை இருமுறை கொலை செய்ய முயன்றாராம். இதற்கிடையே கெளதம், பிரியாவுடன் நந்தனம் சிஐடி நகா் கிழக்கு ஸ்ரீராம்பேட்டை தெருவில் ஒரு வாடகை வீட்டில் அண்மையில் குடியேறினாா்.

இந்த நிலையில், கெளதம் வீட்டுக்கு புதன்கிழமை இரவு ஆட்டோ மற்றும் மோட்டாா் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் வந்து, கெளதமை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது.

மூவா் கைது: தகவலறிந்த சைதாப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கெளதம் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, ராஜ்கிரணின் கூட்டாளிகள் தேனாம்பேட்டை எஸ்.எம்.நகரைச் சோ்ந்த வெ.ராஜாபாய் (28), ந.பிரதீப் (26), தியாகராய நகா் தெற்கு போக் சாலை பகுதியைச் சோ்ந்த க.சுரேஷ் (27) ஆகிய 3 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து ஒரு ஆட்டோ, 3 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ராஜ்கிரண் உள்ளிட்ட 5 போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com