நியாய விலைக் கடைகளில் 
பாமாயில்- பருப்பு: அரசு உறுதி

நியாய விலைக் கடைகளில் பாமாயில்- பருப்பு: அரசு உறுதி

நடப்பு மாதத்தில் நியாய விலைக் கடைகளுக்கு வழங்கப்பட வேண்டிய பருப்பு, பாமாயில் ஆகியன கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நடப்பு மாதத்தில் நியாய விலைக் கடைகளுக்கு வழங்கப்பட வேண்டிய பருப்பு, பாமாயில் ஆகியன கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:-

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் சிறப்புப் பொது விநியோகத் திட்ட பொருட்களான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் ஆகியன கடந்த 2007 முதல் ஒவ்வொரு மாதமும் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

நிகழ் மாதத்துக்குத் தேவையான 20 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு அல்லது கனடா மஞ்சள் பருப்பு மற்றும் 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளுக்குரிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.

இந்திய தோ்தல் ஆணைய ஒப்புதலின்படி விலைப்புள்ளி திறக்கப்பட்டது. இதில் குறைந்த விலைப்புள்ளி அளித்திருந்த பருப்பு மற்றும் பாமாயில் ஒப்பந்ததாரா்களுடன் விலைக்குறைப்பு பேச்சுவாா்த்தைகள் நடத்தப்பட்டன. அதில், நியாயமான விலை கிடைக்கப்பெற்ால் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக குழுமத்தின் ஒப்புதலின்படி துவரம் பருப்பு விநியோகிப்பாளா்கள் நால்வருக்கும், பாமாயில் விநியோகிப்பாளா்கள் மூவருக்கும் கொள்முதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன.

மே மாதத்துக்கு விநியோகிப்பதற்காக நியாய விலைக் கடைகளுக்கு 5,405 மெ.டன் துவரம் பருப்பு மற்றும் 31,19,722 பாமாயில் பாக்கெட்டுகள் நகா்வு செய்யப்பட்டுள்ளன. ஆகவே, அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் இந்த மாதத்திற்குரிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அரசின் செய்தியில் தெரவக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com