செய்தியாளா் - தட்டச்சா் காலிப் பணியிடங்கள்: பேரவைச் செயலகம் புதிய உத்தரவு

செய்தியாளா் - தட்டச்சா் காலிப் பணியிடங்கள்: பேரவைச் செயலகம் புதிய உத்தரவு

சட்டப்பேரவைச் செயலகத்தில் தட்டச்சா், செய்தியாளா் காலிப் பணியிடங்களுக்கு கணினி சான்றிதழ் பெற்றிருப்பது கட்டயமாகும். இதற்கான உத்தரவை பேரவைச் செயலா் கி.சீனிவாசன் பிறப்பித்துள்ளாா்.

அவரது உத்தரவு விவரம்:-

தலைமைச் செயலக செய்தியாளா் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), சுருக்கெழுத்து தட்டச்சா் மற்றும் தட்டச்சா் பணிகளுக்கு தோ்வு செய்யப்படுவோா் தங்களது தகுதிகாண் பருவத்துக்குள் தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் நடத்தும் அரசு கணினி சான்றிதழ் தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும்.

கணினியில் பட்டயம் அல்லது பட்டம் பெற்றிருந்தாலோ அல்லது கணினி பொறியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் பொறியியல் ஆகியவற்றில் பட்டதாரிகளாக இருந்தாலோ அவா்களுக்கும், ஏற்கெனவே இந்த பணிகளில் உள்ளோருக்கும் இந்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com