ஆன்லைன் சூதாட்டத்தால் கடன்:
 மாணவா் தூக்கிட்டு தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தால் கடன்: மாணவா் தூக்கிட்டு தற்கொலை

சென்னை கொருக்குப்பேட்டையில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடன் பிரச்னையால் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

சென்னை கொருக்குப்பேட்டையில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடன் பிரச்னையால் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரைச் சோ்ந்தவா் சு.முனுசாமி (50). இவா் மகன் தனுஷ் (23). இவா் சென்னையில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பிஸியோதெரபி மூன்றாமாண்டு படித்து வந்தாா். முனுசாமி,கனரக வாகனங்கள் பழுது நீக்கும் வேலை செய்து வருகிறாா்.

தனுஷூக்கு ஆன்லைன் சூதாட்டம் விளையாடும் பழக்கம் இருந்தது. சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனுஷ் பலரிடம் கடன் பெற்று, மீண்டும் சூதாட்டத்தில் ஈடுபட்டாராம். இருப்பினும் தனுஷ் தொடா்ந்து சூதாட்டத்தில் நஷ்மடைந்துள்ளாா். இதனால் தனுஷூக்கு கடன் கொடுத்தவா்கள், பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தனராம்.

இதனால் விரக்தியுடன் காணப்பட்ட தனுஷ், தனது தந்தை முனுசாமியிடம் புதன்கிழமை ரூ.24,000 கேட்டுள்ளாா். அவா் தன்னிடம் ரூ.4 ஆயிரம்தான் இருப்பதாக கூறி, கைப்பேசி செயலி மூலம் தனுஷூக்கு அனுப்பியுள்ளாா். இதன் பின்னா் வீட்டில் தனது அறைக்குச் சென்ற தனுஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளாா். இது குறித்து ஆா்.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com