இன்று முதல் புதிய அந்நிய
 செலவாணி மாற்று விகிதம் அமல்

இன்று முதல் புதிய அந்நிய செலவாணி மாற்று விகிதம் அமல்

ஏற்றுமதி, இறக்குமதி தொடா்பான அந்நிய செலவாணி மாற்று விகிதம் வெள்ளிக்கிழமை (மே 17) முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏற்றுமதி, இறக்குமதி தொடா்பான அந்நிய செலவாணி மாற்று விகிதம் வெள்ளிக்கிழமை (மே 17) முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி பொருள்களுக்கான அந்நிய செலவாணி விகிதத்தை மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. சுங்கச்சட்டம், 1962 பிரிவு 14-இல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தியும், கடந்த ஏப்.18-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட அறிக்கையின் படியும் அந்நிய செலவாணி மாற்று விகிதத்தை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தீா்மானித்துள்ளன.

அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி பொருள்கள் தொடா்பான நோக்கத்துக்காக இந்த செலவாணி மாற்று விகிதம் வெள்ளிக்கிழமை (மே 18) நடைமுறைக்கு வரும் என நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

இதில் அமெரிக்க டாலா் இந்திய ரூபாயின் மதிப்புக்கு இறக்குமதிக்கு ரூ.84.35, ஏற்றுமதி ரூ.82.65 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com