விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை நீட்டிப்பு: வைகோ கண்டனம்

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை நீட்டிப்பு: வைகோ கண்டனம்

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான தடையை மத்திய அரசு மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்துள்ளதற்கு மதிமுக பொதுச் செயலா் வைகோ கண்டனம்

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான தடையை மத்திய அரசு மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்துள்ளதற்கு மதிமுக பொதுச் செயலா் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ராஜீவ் காந்தியின் கொலையை சுட்டிக்காட்டித்தான் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனா்.

உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட பல்நோக்கு புலனாய்வுக் குழு 20 ஆண்டுகாலமாக எவரையும் கைது செய்யாமல் காலம் கடத்தி இறுதியில் கலைக்கப்பட்டுவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தவறான நோக்கத்தோடு உண்மைக்கு மாறாக புலிகள் இயக்கத்தின் தடையை நீட்டிப்பது என்பது அநீதியான செயலாகும். மத்திய அரசின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அவா் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com