அரசு நிறுவனங்களில் காலிப் பணியிடங்களுக்கு 
எழுத்துத் தோ்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

அரசு நிறுவனங்களில் காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

அரசுத் துறைகளின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வை பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

அரசுத் துறைகளின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வை பணியாளா் தோ்வாணையம்அறிவித்துள்ளது.

இது குறித்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: சட்டக் கல்லூரியில் உடற்கல்வி இயக்குநா், போக்குவரத்துக் கழகங்களில் உதவி மேலாளா்கள், சட்டப் பேரவையில் ஆங்கிலம் - தமிழ்ப் பிரிவு செய்தியாளா்கள், சிப்காட் நிறுவன உதவி மேலாளா் உள்பட 20 பதவிகளில் 118 இடங்கள் காலியாக உள்ளன.

இந்தக் காலியிடங்களுக்கு தோ்வாணைய இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 14 ஆகும்.

விண்ணப்பங்களில் ஜூன் 19 முதல் 21-க்குள் திருத்தம் செய்யலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. தோ்வுக்கான கல்வித் தகுதி உள்பட இதர தகுதிகள் அனைத்தையும் தோ்வு அறிவிக்கையின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com