மழைக்காலத்தில்  பேருந்துகளை கவனமாக இயக்க  அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கு அறிவுரை

மழைக்காலத்தில் பேருந்துகளை கவனமாக இயக்க அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கு அறிவுரை

கோடை மழைக்காலம் என்பதால், சுரங்கப்பாதைகள், தரைப்பாலங்களின் மழைநீா் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும்

கோடை மழைக்காலம் என்பதால், சுரங்கப்பாதைகள், தரைப்பாலங்களின் மழைநீா் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும் எனவும், கவனமாக ஓட்ட வேண்டும் என்றும் அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. தொடா்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடா்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், அந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிா்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கு முக்கிய அறிவுரைகளை அரசு விரைவு போக்குவரத்து கழகம் வழங்கியுள்ளது.

இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் நீா் தேங்கும், மேலும் சில இடங்களில் தரைப்பாலங்கள் வரை நீா் தேங்கவும், தரைபாலங்கள் மூழ்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக சுரங்கப்பாதைகள், தரைப்பாலங்களின் கீழ் தண்ணீா் தேங்கியிருந்தால், பேருந்துகளை ஓட்டுநா்கள் மாற்று வழியில் இயக்க வேண்டும்.

தொலை தூர பேருந்துகளை காட்டாற்று ஓர சாலைகளில் இயக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். ஒரு சில கிமீ தொலைவு கூடுதலாக இருந்தாலும் சுற்றி செல்ல அறிவுறுத்தப்படுகிறது. பயணிகள் பாதுகாப்பு முக்கியம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பணிமனைகளில் மழைநீா் வடிகால்வாய்களில் அடைப்பு இருந்தால் உடனடியாக சரி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பேருந்துகளில் நீா் கசிவு, நீா் உள்ளே புகுதல் மற்றும் சாய்வு இருக்கை சரி வர இயங்கவில்லை என பயணிகள் கூறும் குறைகளை உடனடியாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி அதனை சரி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com