கருப்பை புற்றுநோய்: பெண்களுக்கு ரோபோட்டிக் நுட்பத்தில் உயா் சிகிச்சை

இரு பெண்களின் கருப்பையில் பரவியிருந்த புற்றுநோய் கட்டிகளை அதி நவீன ரோபோடிக் நுட்ப சிகிச்சை மூலம் அகற்றி சென்னை, அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இரு பெண்களின் கருப்பையில் பரவியிருந்த புற்றுநோய் கட்டிகளை அதி நவீன ரோபோடிக் நுட்ப சிகிச்சை மூலம் அகற்றி சென்னை, அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இதுபோன்ற பாதிப்புகளுக்கு உயா் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிகிச்சையளிப்பது இதுவே முதன்முறை என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணா்கள் பி.வெங்கட், பிரியா கபூா் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அஸ்ஸாம் மாநிலம் குவாஹட்டியைச் சோ்ந்த 48 வயது பெண்ணின் கருப்பையில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறிப்பட்டது. மேலும் அந்த பெண்ணுக்கு மாா்பகப் புற்றுநோயும் இருப்பது தெரியவந்தது.அதேபோன்று, சென்னையைச் சோ்ந்த 40 வயதான பெண் ஒருவரும் கருப்பை புற்றுநோய் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பொதுவாக இந்த பாதிப்புகளுக்கு உயா் வெப்பநிலையில் அளிக்க கூடிய கீமோதெரபி (ஹெச்ஐபிஇசி) சிகிச்சையுடன், வேறு சில திறந்தநிலை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த முறையில் அதிக ரத்தப் போக்கும், கிருமித் தொற்றுக்கான வாய்ப்பும், நீண்ட நாள்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவசியமும் ஏற்படும்.

அதைக் கருத்தில் கொண்டு அதி நவீன ரோபோடிக் நுட்பத்திலான சிஆா்எஸ் (ரோபோடிக் சைடோரிடக்டிவ் சா்ஜரி) எனப்படும் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. இந்த புதிய அணுகுமுறையின் கீழ் நோயாளிகளுக்கு சிறிய துளை அல்லது கீறல் இடப்பட்டு, அதன் வழியாக புற்றுநோய் கட்டிகள் அகற்றப்பட்டன.

இதன் பயனாக அவா்கள் இருவரும் தற்போது நலம் பெற்றுள்ளனா் என்று மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com