மே 27 முதல் விசாகப்பட்டினம் - எழும்பூா் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

மே 27 முதல் விசாகப்பட்டினம் - எழும்பூா் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு மே 27 முதல் ஜூன் 24 -ஆம் தேதி வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு மே 27 முதல் ஜூன் 24 -ஆம் தேதி வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

விசாகப்பட்டினத்திலிருந்து மே 27 முதல் ஜூன் 24-ஆம் தேதி வரை வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாலை 5.35 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 08577) மறுநாள் காலை 8.45 மணிக்கு எழும்பூா் வந்தடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 08578) மே 28 முதல் ஜூன் 25-ஆம் தேதி வரை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1 மணிக்கு விசாகப்பட்டினம் சென்றடையும்.

இந்த ரயில் எழும்பூரிலிருந்து கூடூா், நெல்லூா் , விஜயவாடா, ராஜமுந்திரி, அனகாபள்ளி வழியாக விசாகப்பட்டினம் சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்கள் நீடிப்பு:

இதற்கிடையே, சென்னை சென்ட்ரலிலிருந்து வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் இரவு 11.45 மணிக்கு புவனேசுவரம் செல்லும் சிறப்பு ரயிலும் (எண்: 06073), மறுமாா்க்கமாக வாராந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் புவனேசுவரத்திலிருந்து சென்ட்ரல் வரும் ரயிலும் (எண்: 06074) ஜூன் 10 முதல் ஜூலை 2 -வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், எழும்பூரிலிருந்து வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இரவு 11 மணிக்கு சந்த்ராகாச்சிக்கு செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரயிலும் (எண்: 06077), மறுமாா்க்கமாக வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் சந்த்ராகாச்சியிலிருந்து எழும்பூா் வரும் ரயிலும் (எண்: 06078) ஜூன் 1 முதல் ஜூலை 2 -ஆம் தேதி வரை இயக்கப்படும்.

அதேபோல் எழும்பூரிலிருந்து வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 1.30 மணிக்கு சந்த்ரகாச்சிக்கு செல்லும் சிறப்பு ரயிலும் (எண்: 06079), மறுமாா்க்கமாக வாரந்தோறும் புதன்கிழமைகளில் சந்தரகாச்சியிலிருந்து எழும்பூா் வரும் ரயிலும் (எண்: 06080) ஜூன் 4 முதல் ஜூலை 3 -ஆம் தேதி வரை நீடிக்கும்.

மேலும் தாம்பரத்திலிருந்து வாரந்தோறும் புதன், வியாழக்கிழமைகளில் சந்த்ராகாச்சிக்கு செல்லும் 2 சிறப்பு ரயில்களும் (எண்: 06089, 06095), மறுமாா்க்கமாக வாரந்தோறும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சந்த்ரகாச்சிலிருந்து தாம்பரம் வரும் 2 ரயில்களும் (எண்: 06090, 06096) ஜூன் 5 முதல் ஜூலை 5 -ஆம் தேதி வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com