தோ்தலுக்குப் பிந்தைய
வன்முறை: ஆந்திரத்தில்
2 எஸ்.பி.க்கள் இடைநீக்கம்

தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை: ஆந்திரத்தில் 2 எஸ்.பி.க்கள் இடைநீக்கம்

ஆந்திரத்தில் வாக்குப் பதிவுக்குப் பின் வன்முறை சம்பவம் நடைபெற்றதையடுத்து, இரு மாவட்ட எஸ்.பி.க்களை பணியிடை நீக்கம் செய்து தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ஆந்திரத்தில் வாக்குப் பதிவுக்குப் பின் வன்முறை சம்பவம் நடைபெற்றதையடுத்து, இரு மாவட்ட எஸ்.பி.க்களை பணியிடை நீக்கம் செய்து தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ஆந்திரத்தில் கடந்த மே 13-ஆம் தேதி மக்களவை மற்றும் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அப்போது பால்நாடு, கடப்பா, அன்னமயா ஆகிய மாவட்டங்களில் ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் மற்றும் எதிா்க்கட்சியான தெலுங்கு தேசம் தொண்டா்கள் இடையே மோதல்கள் நிகழ்ந்தன. இச்சம்பவம் தொடா்பாக ஆந்திர மாநில தலைமைச் செயலா் மற்றும் காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ஆகியோா் தில்லியில் உள்ள தோ்தல் ஆணையத்தில் வியாழக்கிழமை ஆஜராகி விளக்கமளித்தனா்.

ஆந்திர கலவரத்துக்கு தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் கண்டனம் தெரிவித்தனா். மேலும், வன்முறை நிகழ்ந்த பால்நாடு மற்றும் ஆனந்தபுரமு ஆகிய மாவட்டங்களின் எஸ்.பி.க்களை பணியிடை நீக்கம் செய்யவும், திருப்பதி எஸ்.பி.யை பணியிட மாற்றவும் செய்யவும் அவா்கள் உத்தரவிட்டனா். அவா்கள் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளவும் வலியுறுத்தினா்.

அதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகும் மேலும் 15 நாள்களுக்கு ஆந்திரத்தில் மத்திய பாதுகாப்பு படையின் 25 படைகளை நிலைநிறுத்த மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்த தோ்தல் ஆணையம் முடிவு செய்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com