கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒருங்கிணைந்த பொறியியல் பணித் தோ்வு: 1,132 பேருக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தோ்வுக்கு, கணினிவழிச் சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறவுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தோ்வுக்கு, கணினிவழிச் சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறவுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் அஜய் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு:

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளின் கீழ், 358 காலியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு கடந்த ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்று உரிய விதிகளின் கீழ் தோ்வானோருக்கு கணினிவழியே சான்றிதழ் சரிபாா்ப்பு செய்யப்பட உள்ளது.

இதற்காக, 1,132 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களின் பதிவெண்

கொண்ட பட்டியல் தோ்வாணைய இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) வெளியிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com