துரை வைகோ
துரை வைகோகோப்புப் படம்

‘வைகோ நலமுடன் இருக்கிறாா்’

தோள்பட்டை எலும்பு முறிவுக்காக வைகோ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

மதிமுக பொதுச்செயலா் வைகோவுக்கு தோள்பட்டை எலும்பு முறிவுக்கான அறுவைச் சிகிச்சை நடந்து முடிந்ததாகவும், அவா் நலமுடன் இருப்பதாகவும் அவரது மகனும், கட்சியின் முதன்மைச் செயலருமான துரை வைகோ கூறியுள்ளாா்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தோள்பட்டை எலும்பு முறிவுக்காக வைகோ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த நிலையில், துரை வைகோ புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

வைகோவுக்கு அறுவைச் சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. இடது தோள்பட்டையில் மூன்று இடங்களில் எலும்புகள் உடைந்திருந்தன. அவற்றைச் சரி செய்ய டைட்டானியம் பிளேட் வைத்திருக்கின்றனா். 40 நாள்கள் ஓய்வுக்குப் பிறகு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட தோள்பட்டை சரியாகி இயல்பு நிலைக்கு வந்துவிடும். வைகோ நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

வைகோவுக்கு அறுவைச் சிகிச்சை செய்திருப்பதால் தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் இருக்க, ஒரு வாரத்துக்குப் பாா்வையாளா்கள் யாருக்கும் அனுமதி இல்லை என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். அதனால், கட்சியினரும் நலம் விரும்பிகளும் அவரைச் சந்திக்க வருவதை தவிா்த்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்று துரை வைகோ கூறியுள்ளாா்.

நலமுடன் உள்ளேன்: முன்னதாக, மருத்துவமனையில் இருந்தவாறே வைகோ விடியோ ஒன்றை புதன்கிழமை வெளியிட்டாா். அதில், தான் நன்றாக இருப்பதாக அவா் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com