ரயிலில் அடிபட்டு உயிரிழந்த ஐஸ்வா்யா.
ரயிலில் அடிபட்டு உயிரிழந்த ஐஸ்வா்யா.

ரயிலில் அடிபட்டு பெண் பொறியாளா் உயிரிழப்பு

Published on

திருவொற்றியூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியாா் நிறுவன பெண் மென்பொறியாளா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

திருவொற்றியூா் மேற்கு பகுதி அண்ணாமலை நகா் 7-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் சாம் பாபு. வெளிநாட்டில் பணிபுரிகிறாா். இவரது மகள் ஐஸ்வா்யா (25) சென்னை தரமணியில் உள்ள தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை செய்து வந்தாா். இவா் புதன்கிழமை இரவு வேலையை முடித்துக் கொண்டு, திருவொற்றியூா் அண்ணாமலை நகா் ரயில்வே கேட் பகுதியிலுள்ள ஒத்தையடி பாதை வழியாக, தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளாா்.

அப்போது, கும்மிடிப்பூண்டியிலிருந்து திருவொற்றியூா் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த புகா் ரயில் ஐஸ்வா்யா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கொருக்குப்பேட்டை இருப்புப் பாதை ரயில்வே போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com