கோப்புப்படம்.
கோப்புப்படம்.

வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும்: வானிலை மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபா் மாதம் 3- ஆவது வார மத்தியில் தொடங்கும் என்றும், மழைப் பொழிவு இயல்பை விட அதிகம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் பாலச்சந்திரன் கூறினாா்.
Published on

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபா் மாதம் 3- ஆவது வார மத்தியில் தொடங்கும் என்றும், மழைப் பொழிவு இயல்பை விட அதிகம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் பாலச்சந்திரன் கூறினாா்.

சென்னையில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் பேசியதாவது:

தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப். 30 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பதிவான மழை அளவு 39 செ.மீ.- ஆக இருந்தது. இந்த காலகட்டத்தில் மழைப் பொழிவு இயல்பான அளவு 33 செ.மீ. ஆகும். அதன்படி, நிகழாண்டில் 18 சதவீதம் அதிக மழைப்பொழிவு பதிவானது.

தென்மேற்கு பருவமழை 17 மாவட்டங்களில் இயல்பை விட மிக அதிகமாகவும், 16 மாவட்டங்களில் இயல்பான அளவிலும், 6 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் பதிவாகி உள்ளது.

சென்னையை பொருத்தவரை கடந்த ஆண்டு 74 சதவீதமும், நிகழாண்டு 43 சதவீதமும் இயல்பை விட அதிகமாக மழை பதிவாகி உள்ளது.

வடகிழக்கு பருவ மழை இந்த மாதம் (அக்டோபா்) 3-ஆ வது வாரத்தின் மத்தியில் தொடங்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com